Saturday, January 17, 2009

இயல்பியல்


வான் தொடும் தூரத்தில்
கிடைத்த மேகத்தின்
உச்சியில் மிச்சமிருக்கிறது
ஒரு சொட்டு நீர்

இரண்டு நெடுங்கோடுகளுக்கு
இடைப்பட்ட பள்ளத்தில்
தனக்கான தேக்கங்களில்
நிறைத்துக்கொண்டு
சென்றது ரயில் வண்டியின் பெட்டிகள்

நாளை பொம்மை கிடைக்கும்
என்ற நிம்மதியில்
உறங்குகிறது ஒரு குழந்தை

நனைந்து விடக்கூடாதென்று
மழையை வேடிக்கை பார்த்து
ஒதுங்கி நிற்கிறேன்
இன்னமும் விடாத தூறலை ரசித்தபடி

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

தேசாந்திரி-பழமை விரும்பி said...

நண்பருக்கு வணக்கம்.
நானும் தேசாந்திரி என்ற பெயரில் தான் என்னுடைய
(http://desandhiri.blogspot.com/)
வலை தளத்தை ஆரம்பிதேன்.
எதேர்ச்சையாக !
பின்புதான், இதே பெயரில் இரண்டு மூன்று வலைத் தளங்கள் இருப்பதை அறிந்தேன்.
இப்போது என் வலைதளத்தின் தலைப்பையும், என் புனைப் பெயரையும் "தேசாந்திரி - பழமை விரும்பி" என்ற பெயரில் மாற்றி எழுதி வருகிறேன்.
உங்கள் தகவலுக்காக,
தேசாந்திரி - பழமை விரும்பி.

மற்றவை ,
http://thesanthri.blogspot.com/
http://desanthiri-2.blogspot.com/

Post a Comment